எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்து மோடி அரசு மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது - பிரியங்கா காந்தி


எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்து மோடி அரசு மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 20 Sept 2019 11:46 AM IST (Updated: 20 Sept 2019 11:46 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வது, மக்களின் நம்பிக்கையை சிதைப்பது போன்றதாகும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி வதேரா  தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

எல்.ஐ.சி. என்பது இந்தியா மீதான நம்பிக்கையின் மற்றொரு பெயர். பொது மக்கள் தங்கள் கடின உழைப்பை   எல்.ஐ.சி. யில் தங்கள் எதிர்கால பாதுகாப்புக்காக முதலீடு செய்கிறார்கள், ஆனால் பாஜக அரசு எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அவர்களின் நம்பிக்கையை சிதைத்து வருகிறது. 

எல்.ஐ.சி. வெறும் இரண்டரை மாதங்களில், ரூ.57,000 கோடி இழப்பை சந்தித்து உள்ளது.

இது எந்த வகையான கொள்கையாகும், இது இழப்பை ஏற்படுத்தும் கொள்கையாக மாறியுள்ளது? ” என கூறி உள்ளார்.

நஷ்டம் விளைவிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில்  முதலீடு செய்வதன் மூலம் அரசாங்கம் பொது பணத்தை  இழக்கிறது என  காங்கிரஸ் புதன்கிழமை குற்றம் சாட்டியதோடு, எல்.ஐ.சி. யை அதன் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியது. 

காங்கிரஸின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மேக்கன் ஒரு ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) கடந்த ஐந்து ஆண்டுகளில் “ஆபத்தான” பொதுத்துறை நிறுவனங்களின்  முதலீட்டை 11.94 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 22.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது என்று கூறினார்.


Next Story