தேசிய செய்திகள்

"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி + "||" + Measures to reduce corporate tax are Historical-PM Modi

"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி

"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி
கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
மும்பை

வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு நிறுவனங்களுக்கும் புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு  முன்மொழிந்துள்ளதாக  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று தெரிவித்தார்.

ரூ. 1.45 லட்சம் கோடி ஊக்கத் தொகுப்பின் ஒரு பகுதியாக கார்ப்பரேட்  வரி விகிதங்களை அரசாங்கம் இன்று குறைத்துள்ளது. இதனால்  வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் துறை பங்குகள் பன்மடங்கு உயர்ந்து உள்ளது. 
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இது மேக் இன் இந்தியாவுக்கு ஒரு சிறந்த உத்வேகத்தை  கொடுக்கும், உலகெங்கிலும் இருந்து தனியார் முதலீட்டை ஈர்க்கும், நமது தனியார் துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது. இது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.  130 கோடி இந்தியர்களுக்கு வெற்றியை அளிக்கும் என கூறி உள்ளார்.