சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கோவா,
ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் இன்று கோவாவில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. உலர் புளிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஓட்டல், விடுதி தினசரி வாடகை ரூ.1000 இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. ரூ.1,001 ல் இருந்து ரூ.7,500 வரை வாடகை உள்ள ஓட்டல், விடுதி அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7.500-க்கு மேல் வாடகை உள்ள ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்த 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படாத பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுகிறது.
ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளி பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது. குளிர்பானங்கள், டீ, காபிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி கட்டண நடைமுறை அக்.,1 முதல் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story