ஓட்டல் அறை வாடகை ஆயிரம் ரூபாய் வரை ஜி.எஸ்.டி. இல்லை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஓட்டல் அறை ஒரு நாள் வாடகை ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் ஜி.எஸ்.டி. இல்லை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பனாஜி,
கோவா மாநிலம் பனாஜியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காபி தொடர்பான பானங்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதம் மற்றும் கூடுதல் வரி 12 சதவீதம் என 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
ஓட்டல்களை பொறுத்தவரை தங்கும் அறைகளுக்கு ஒரு நாள் வாடகை கட்டணம் ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் ஜி.எஸ்.டி. இல்லை. ரூ.1001 முதல் ரூ.7,500 வரை இப்போது 18 சதவீதமாக உள்ள வரி 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரூ.7,500-க்கு மேல் 18 சதவீதமாக (தற்போது 28 சதவீதம்) குறைக்கப்படுகிறது.
உணவு சப்ளைக்கு (கேட்டரிங்) 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உள்ளட்டு வரி கடன் சலுகையுடன் குறைக்கப்படுகிறது. கப்பல் எரிபொருளுக்கு 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதேசமயம் சரக்கு ரெயில் எரிபொருளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத சில குறிப்பிட்ட ராணுவ பொருட்கள் இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. உலர்ந்த புளி மற்றும் இலைகள், பூக்கள், மட்டைகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட தட்டு, டம்ளர்களுக்கு 5 சதவீதமாக இருந்த வரி நீக்கப்படுகிறது. நெய்த மற்றும் நெய்யப்படாத பாலியெத்திலீன் பைகளுக்கு ஒரே சீராக 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
10-13 பேர் பயணம் செய்யும் பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 1 சதவீதமாகவும், அதே தகுதி கொண்ட டீசல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 3 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. பாதாம் பாலுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
வெட்கிரைண்டர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ஜிப்புகளுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், வைரம் தொடர்பான பணிகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகவும், இதுவே எந்திர பணிகளுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
மீன் உணவு மற்றும் சக்கரங்கள் போன்ற இதர விவசாயம் சார்ந்த கருவிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மொத்தம் 20 பொருட்கள் மற்றும் 12 சேவைகளுக்கு வரிகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறினார்.

Related Tags :
Next Story