இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் மதியம் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் மதியம் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
புதுடெல்லி,
இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துகிறது. இதில், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் அரியானா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட கூடும் என கூறப்படுகிறது.
இதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story