தேசிய செய்திகள்

மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு + "||" + Kerala Catholic priest booked for sexually assaulting three 9-year-old girls

மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு

மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு
மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எர்ணாகுளம்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க  தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் 
கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜெப வேளையில் மூன்று சிறுமிகள் பாதிரியாரிடம் ஆசி பெற அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் அவர் வரம்பு மீறியதாக கூறப்படுகிறது. மாணவிகள் ஆசிரியர்களிடம் நடந்ததை கூறியதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மூன்று சிறுமிகளிடமும் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் பாதிரியார் தலைமறைவாகி விட்டார். தேவாலயப் பணியிலிருந்து பாதிரியாரை இடைநீக்கம் செய்திருப்பதுடன், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவருக்கு எர்ணாகுளம்-அங்கமாலி கத்தோலிக்க மறைமாவட்டம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 1000 டிஎம்சிக்கு அதிகமான தண்ணீர் வீணாகிறது - கேரள அமைச்சர்
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 1000 டிஎம்சிக்கு அதிகமான தண்ணீர் வீணாகிறது என கேரள அமைச்சர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
2. கணவனின் வக்கிர ஆசை: பாதிக்கப்பட்ட மனைவி புகாரால் 4 பேர் கைது
கணவனின் வக்கிர ஆசையால் பாதிக்கப்பட்ட மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவனின் நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.