தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் + "||" + ec asks parties not to use plastic polythene in poll material

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுடெல்லி,

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த சூழலில், மராட்டியம் மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல்களில் கட்சிகள் தங்கள் சின்னம் மற்றும் வேட்பாளர்களை பிரபலப்படுத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு  தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இரு மாநிலங்களுக்கும் இன்று சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,  அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே தங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்பாளர்களுக்கு, இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் சுனில் அரோரா பேட்டியின் போது தெரிவித்தார்.  அரியானா மற்றும் மராட்டியத்தில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  ஒரே கட்டமாக  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரத்தில் 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. பள்ளி வளாகத்தில், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
பள்ளி வளாகத்தில், மாணவர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
3. நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.15½ லட்சம் அபராதம் வசூல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-