காஷ்மீரில் குலாம்நபி ஆசாத் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்தான பின்னர் முதல் முறையாக பயணம்


காஷ்மீரில் குலாம்நபி ஆசாத் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்தான பின்னர் முதல் முறையாக பயணம்
x
தினத்தந்தி 21 Sept 2019 9:37 PM IST (Updated: 22 Sept 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் குலாம்நபி ஆசாத் முதல் முறையாக காஷ்மீர் சென்றார். மக்களை நேரில் சந்தித்து பேசினார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத் தற்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவராக உள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

குலாம்நபி ஆசாத் தனது சொந்த மாநிலத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அவர் 3 முறை காஷ்மீர் செல்ல முயன்றும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் செல்ல அனுமதிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த திங்கட்கிழமை குலாம்நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்த்நாக் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி குலாம்நபி ஆசாத் 4 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக ஸ்ரீநகர் சென்றார். மக்களை நேரில் சந்தித்து அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அவர் நேற்று அங்குள்ள லால்டெட் ஆஸ்பத்திரிக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

சுற்றுலா வரவேற்பு மையத்துக்கு சென்ற அவர் அங்குள்ள காஷ்மீர் படகுவீடு உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். மக்களின் மனநிலை, சுற்றுலா பயணிகள் வருகை போன்றவை பற்றி அவர்களிடம் ஆசாத் விசாரித்தார்.


Next Story