தேசிய கல்வி கொள்கை குறித்து டெல்லியில் ஆலோசனை - மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்பு


தேசிய கல்வி கொள்கை குறித்து டெல்லியில் ஆலோசனை - மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 8:51 PM GMT (Updated: 21 Sep 2019 8:51 PM GMT)

தேசிய கல்வி கொள்கை குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதில் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.

புதுடெல்லி,

தேசிய கல்வி கொள்கை குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் பொக்ரியால் தலைமையில் மத்திய கல்வி வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் பிரகலாத்சிங் பட்டேல், கிரண் ரிஜிஜு, சஞ்சய் தோத்ரே, பல்வேறு மாநிலங்களின் கல்வி மந்திரிகள், மத்திய, மாநில கல்வித்துறை உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், வாரிய உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2019 வரைவு தேசிய கல்வி கொள்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் மத்திய மந்திரி பொக்ரியால் கூறும்போது, “தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகள், முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில கல்வி மந்திரிகள் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். அமைச்சரகம் இந்த கொள்கையை இறுதி செய்யும்போது மாநிலங்களின் ஆலோசனைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்றார்.


Next Story