டெல்லியில் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கி சூடு


டெல்லியில் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 23 Sept 2019 1:33 AM IST (Updated: 23 Sept 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியின் மாண்டவலி பகுதியில் உள்ள அக்‌ஷர்தாம் கோவில் முன்பு நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சுதாரிப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story