சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு மரண தண்டனை
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் பார்சன் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர தாக்குர் (வயது 27). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம், பக்கத்து வீட்டை சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், அந்த சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, உடலை வயற்காட்டில் புதைத்தார். இந்த கொடூரத்துக்கு அவருடைய தந்தை மது தாக்குரும் உடந்தையாக இருந்தார். இதுதொடர்பாக கிரிதியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் ‘போக்சோ’ கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இதில், ராமச்சந்திர தாக்குருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ராம்பாபு குப்தா உத்தரவிட்டார். தந்தை மது தாக்குருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story