ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு 4 யானைகள் சாவு


ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு 4 யானைகள் சாவு
x
தினத்தந்தி 22 Sep 2019 8:52 PM GMT (Updated: 22 Sep 2019 8:52 PM GMT)

ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 4 யானைகள் உயிரிழந்தது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நந்தன்கனன் மிருகக்காட்சி சாலை உள்ளது. அங்கு 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. எண்டோதெலியோடிராபிக் ஹெர்ப்ஸ் என்ற ஒருவகை வைரஸ் தாக்கியதில், கடந்த ஒரு மாத காலத்தில் 4 குட்டி யானைகள் பலியாகி விட்டன.

இதையடுத்து, மீதி உள்ள 4 யானைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிசா மாநில அரசு எடுத்து வருகிறது. அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இந்த வைரஸ் தாக்கியதில் யானைகள் உயிரிழந்து இருப்பதால், அம்மாநில நிபுணர்களின் உதவியை ஒடிசா மாநில அரசு நாடி உள்ளது.

மீதி உள்ள 4 யானைகளுக்கும் வைரஸ் பரவி உள்ளதா என்பதை கண்டறிய அவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை மந்திரி பி.கருகா தெரிவித்தார்.


Next Story