'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்


எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்
x
தினத்தந்தி 23 Sept 2019 12:25 PM IST (Updated: 23 Sept 2019 12:25 PM IST)
t-max-icont-min-icon

ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழ் மொழியில் 'எல்லாம் சவுக்கியம்' என உரையை தொடங்கினார். இதை கிண்டல் செய்து சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ்  மீடியா வழக்கு தொடர்பாக  முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செப்டம்பர் 5-ந்தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இன்று  சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார்  சிறைசாலைக்கு சென்று சந்தித்தனர்.

இந்தநிலையில், தனது ட்விட்டரில் ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் கருத்து பதிவிடுவதாக குறிப்பிட்டு ட்விட் செய்துள்ளார்.

அதில், "நீண்ட நாட்களுக்கு பிறகு காங்., கட்சி வலிமையாகவும், துணிவுடனும் உள்ளது. நானும் வலிமையாகவும், துணிவுடனும் இருப்பேன். வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு, குறைந்த சம்பளம், வன்முறை  தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது தவிர நாட்டில் அனைத்தும் நன்றாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழ் மொழியில்  'எல்லாம் சவுக்கியம்' என உரையை தொடங்கினார் இதை கிண்டல் செய்து சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.



Next Story