"கா‌‌ஷ்மீரில் நிலைமை மிக மோசம்" - நேரில் பார்வையிட்ட குலாம்நபி ஆசாத் பேட்டி


கா‌‌ஷ்மீரில் நிலைமை மிக மோசம் - நேரில் பார்வையிட்ட குலாம்நபி ஆசாத் பேட்டி
x
தினத்தந்தி 24 Sep 2019 8:30 PM GMT (Updated: 24 Sep 2019 7:47 PM GMT)

கா‌‌ஷ்மீரில் நிலைமை மிக மோசம் என நேரில் பார்வையிட்ட குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

ஜம்மு,

கா‌‌ஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு நிலைமையை நேரில் பார்வையிட அனுமதி கோரி, காங்கிரஸ் மூத்த தலைவரும், கா‌‌ஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம்நபி ஆசாத், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, குலாம்நபி ஆசாத், கா‌‌ஷ்மீருக்கு சென்றார். 4 நாட்களாக தங்கி இருந்து பல இடங்களை சுற்றி பார்த்தார்.

நேற்று ஜம்முவுக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கா‌‌ஷ்மீரில் நிலைமை மிக மோசமாக உள்ளது. பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் செல்ல நினைத்த இடங்களில் 10 சதவீத இடங்களுக்கு கூட அதிகாரிகள் செல்ல விடவில்லை. ஜம்முவில் 2 நாட்கள் தங்கி இருப்பேன். அதன்பிறகு டெல்லி சென்று, கா‌‌ஷ்மீர் நிலவரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story