தேசிய செய்திகள்

ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது + "||" + Wheelchair Rolls by Itself Out of Hospital Driveway in Eerie Video Captured by Security Cameras

ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது

ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது
மருத்துவமனையின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி ஒன்று தானாகப் புறப்பட்டு சாலையில் சென்று நின்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
சண்டிகர், 

சண்டிகர் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் இந்த வியக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இரண்டு இருக்கைகளுக்கு நடுவே நிறுத்தப்பட்டிருக்கும் சக்கர நாற்காலியானது திடீரென பின்னோக்கி நகர்ந்தது.

தொடர்ந்து யாரோ தள்ளிக் கொண்டு செல்வது போலச் முன்னோக்கிச் சென்ற அந்த சக்கர நாற்காலி ஒரு கட்டத்தில், சிறிய படிக்கட்டு போன்ற  அமைப்பையும் தாண்டிச் சென்றது. இறுதியில் சாலை வரை சென்ற அந்த சக்கர நாற்காலியின் பயணம் அத்துடன் நிறைவு பெற்றது.

சக்கர நாற்காலியின் திடீர் திகில் பயணத்தை இரவுப் பணியில் இருந்த காவலாளி மனோஜ் குமாரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மிகவும் வழுவழுப்பான தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சக்கர நாற்காலி மெல்லிதாக வீசிய காற்றின் காரணமாக அதுபோன்று நகர்ந்திருப்பதாக காவலாளி பீதியுடன் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. சன்னி லியோனின் வித்தையை பார்க்க ஆசையா ...! வீடியோவை பாருங்கள்
நடிகை சன்னி லியோன் மேஜிக் செய்து டிக் டாக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
2. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகாரில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள்
2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகாரில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள் இடம்பெற உள்ளன.