இந்தியாவுக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது -சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரிகள்


இந்தியாவுக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது  -சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரிகள்
x
தினத்தந்தி 26 Sep 2019 6:32 AM GMT (Updated: 26 Sep 2019 6:32 AM GMT)

இந்தியாவுக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மொண்டெலஸ் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

நியூயார்க்,

வணிகங்களுடனான உறவை மேம்படுத்தவும், இந்தியாவில் முதலீட்டை  ஈர்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று நியூயார்க்கில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து  பேசினார்.

இந்தியாவில் மிகவும் சாதகமான முதலீட்டு சூழ்நிலையை உருவாக்கிய  பிரதமர் மோடியை தலைமை நிர்வாக அதிகாரிகள் பாராட்டினர். 

மைக்ரான் கார்ப்பரேஷன் தலைவர் பாப் சுவிட்ஸ் கூறும்போது :-

இது மிகவும் சாதகமான சந்திப்பு. இந்தியாவில் வணிகத்தை  மேம்படுத்துவதற்கு அவர் செய்யக்கூடிய விஷயங்கள் குறித்து தலைமை  செயல் அதிகாரிகளிடம் விளக்கினார். அது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது, நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன என்று கூறினார்.

மாண்டெலெஸ் இன்டர்நேஷனல், தலைமை நிர்வாக அதிகாரி, டிர்க் வான் டி புட் கூறும்போது:-

"இந்தியாவில் மோடி செய்து வரும் மாற்றங்களைப் பற்றி நாங்கள் பேசினோம், இந்தியா வணிகத்தை எவ்வாறு எளிதாக்குகிறது. இந்தியா எவ்வாறு மேலும் முன்னேற முடியும் என்பது குறித்த கருத்துகளையும் நான் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இந்தியா அநேகமாக தனக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்காலத்தைக் கொண்ட நாடு என கூறினார்.

Next Story