டெல்லியில் நடந்த சீக்கியர்கள் பேரணியில் சீமான் பங்கேற்பு


டெல்லியில் நடந்த சீக்கியர்கள் பேரணியில் சீமான் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Sep 2019 10:56 PM GMT (Updated: 26 Sep 2019 10:56 PM GMT)

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை கண்டித்தும், அங்கு அரசியல் தலைவர்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட வலியுறுத்தியும் சில சீக்கிய அமைப்புகள் சார்பில் டெல்லியில் நேற்று தேச இன ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

புதுடெல்லி, 

நாடாளுமன்றம் அருகே உள்ள ரகாப் கஞ்ச் குருத்துவரா (சீக்கியர் கோவில்) முன் தொடங்கிய இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர்.

அப்போது சீமான், “காஷ்மீரில் மக்கள் தலைவர்களை வீட்டுச்சிறையிலும், பொதுமக்களை திறந்தவெளி சிறையிலும் வைத்துக்கொண்டு விடுதலை வாங்கித்தந்து விட்டோம் என்று கூறுவது வேடிக்கையானது. இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர்“ என்று கூறினார்.

Next Story