'இப்போதைக்கு வரத் தேவையில்லை' -சரத்பவாருக்கு அமலாக்கத்துறை தகவல்


இப்போதைக்கு வரத் தேவையில்லை -சரத்பவாருக்கு அமலாக்கத்துறை தகவல்
x
தினத்தந்தி 27 Sep 2019 8:59 AM GMT (Updated: 27 Sep 2019 10:40 AM GMT)

'இப்போதைக்கு வரத் தேவையில்லை' என சரத்பவாருக்கு அமலாக்கத்துறை மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து உள்ளது.

மும்பை

மராட்டிய  மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக அமலாக்க துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயரையும் பண மோசடி வழக்கில் சேர்த்து உள்ளது. ஆனால் இதுவரை அவருக்கு சம்மன் அனுப்பப்பட வில்லை இருதாலும் சரத்பவார் தான் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விரைவில் ஆஜர் ஆகப்போவதாக கூறினார். மேலும் மத்திய அரசுக்கு மண்டியிட மாட்டேன் கைதாக தயார் என கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் வினய் சவுபே தலைமையில்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரின் இல்லத்திற்கு இன்று காலை வந்து பாதுகாப்பு அளித்தனர்.

மும்பையில் உள்ள  தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்திலும் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கட்சியின் செய்தித்  தொடர்பாளர் கூறும்போது, மும்பை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கடசியின் தொழிலாளர்களை போலீசார் தடுத்து வைத்து உள்ளனர். அது சரியல்ல. சரத்பவார் இன்று  நிச்சயமாக அமலாக்கத்துறை  அலுவலகத்திற்கு செல்வார். பாஜக அரசு அமலாக்க துறையை தவறாக பயன்படுத்துகிறது என கூறினார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்  அமலக்கத்துறை  அலுவலகத்திற்கு இப்போது விசாரணைக்கு வர வேண்டிய  தேவையில்லை என்று அமலாக்க இயக்குநரகம் மின்னஞ்சல் மூலம்  தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கூறும்போது, "நாங்கள்  அவர்களிடம் கேள்விகளைக் கேட்கிறோம், ஆனால் பதில் கொடுக்கவில்லை " என்று கூறியுள்ளார்.

Next Story