தேசிய செய்திகள்

கேரளாவில் சட்டசபை இடைத்தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றி + "||" + Legislative by-election in Kerala: ruling LDF victory

கேரளாவில் சட்டசபை இடைத்தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றி

கேரளாவில் சட்டசபை இடைத்தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றி
கேரளாவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றது.
கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் அருகே பழா சட்டசபை தொகுதியில் கேரள காங்கிரஸ் (எம்) தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான கே.எம்.மாணி 50 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்த தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது.


நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட கப்பன் வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கேரள காங்கிரஸ் (எம்) வேட்பாளர் ஜோஸ் டாம் புலிக்குனலை 2 ஆயிரத்து 943 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த இடதுசாரி கூட்டணிக்கு இந்த முடிவு ஆறுதலாக அமைந்துள்ளது. காலியாக உள்ள இன்னும் 5 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருகிறதா? - சட்டசபையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில்
108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருகிறதா? என்று சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
2. உண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டசபையில் நேற்று விளக்கம் அளித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்ற பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
3. கேரளாவில் 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 105 வயது மூதாட்டி
மாநில எழுத்தறிவு இயக்க இயக்குனர் ஸ்ரீகலா, பகீரதி அம்மாவின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார்.
4. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாநில பேரிடராக அறிவிப்பு
கேரளாவில் நேற்று 3 - வது நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டதும். மாநில அரசு இதனை நேற்று "மாநில பேரிடர்" என்று அறிவித்தது.
5. கேரளாவைச்சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : கேரள அரசு அவசர ஆலோசனை
கேரளாவைச்சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.