வருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு புதிய நடைமுறை: ‘பான்’ எண் இல்லாதவர்கள் புதிய வசதியை பெற முடியாது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு


வருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு புதிய நடைமுறை: ‘பான்’ எண் இல்லாதவர்கள் புதிய வசதியை பெற முடியாது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2019 11:00 PM GMT (Updated: 27 Sep 2019 8:18 PM GMT)

பான் எண் இல்லாதவர்கள் புதிய வசதியை பெற முடியாது என வருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு புதிய நடைமுறையை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

வருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

இந்த நடைமுறையின்கீழ் வரி செலுத்துவோர், வருமான வரி அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

முகமற்ற மதிப்பீடு திட்டம் (பேஸ்லஸ் இ அசெஸ்மெண்ட் ஸ்கீம்) என இது அழைக்கப்படுகிறது. இதில் வருமான வரி செலுத்துவோருக்கு எந்த பிரச்சினைக்கும் வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள். இ-மதிப்பீட்டு மையம்தான் நோட்டீஸ் அனுப்பும். இந்த நோட்டீசுக்கு வரிசெலுத்துவோர் 15 நாளில் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலைப் பெற்ற பின், அவர்களின் பிரச்சினை, தானியங்கி முறையைப் பயன்படுத்தி ஒரு அதிகாரிக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவர் அதை கையாளுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை ‘பான்’ எண் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள், மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்வதற்கான கணக்கு (இ- பைலிங் அக்கவுண்ட்) இல்லாதவர்கள், வருமான வரி அதிகாரிகளின் அதிரடி சோதனைக்கு ஆளானவர்கள் பெற முடியாது.

இதை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டீ) நேற்று அறிவித்தது.


Next Story