புதிய நீர் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் - மத்திய அரசு உறுதி


புதிய நீர் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் - மத்திய அரசு உறுதி
x
தினத்தந்தி 28 Sep 2019 6:45 PM GMT (Updated: 28 Sep 2019 6:00 PM GMT)

புதிய நீர் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய நீர் வார விழா டெல்லியில் நடந்தது. இதன் இறுதி அமர்வில் மத்திய ஜலசக்தி மந்திரி கஜேந்திர சிங் செகாவத் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘நீர் நிர்வாக கட்டமைப்பு, ஒழுங்கமைப்புகள் மற்றும் தேசிய நீர் பயன்பாட்டு பணியகம் அமைத்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தேசிய நீர் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

நீர் நிர்வாக கட்டமைப்பில் அரசியல் அல்லது நிர்வாக எல்லைகளை அடக்குவதற்கு பதிலாக நீர்நிலை எல்லைகள் உட்படுத்தப்படும் என்று கூறிய செகாவத், இதற்காக அரசியல்சாசன கட்டமைப்பின் கீழ் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாரம்பரிய நீர்நிலைகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என அழைப்பு விடுத்த மத்திய மந்திரி செகாவத், நீர் இருப்பை உபரியாக கொண்டிருக்கும் சத்தீஷ்கார் போன்ற மாநிலங்கள், நீர் தேவையில் இருக்கும் மாநிலங்களுடன் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Next Story