மத்திய அரசிடம் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வியூகம் இல்லை - காங்கிரஸ் தாக்கு


மத்திய அரசிடம் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வியூகம் இல்லை - காங்கிரஸ் தாக்கு
x
தினத்தந்தி 28 Sep 2019 10:30 PM GMT (Updated: 28 Sep 2019 7:11 PM GMT)

மத்திய அரசிடம் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வியூகம் இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு பொருளாதார மந்த நிலையில் தவிக்கிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டபடி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், அவரது ஆலோசகர்களும் ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் (தீர்வு காண முடியாத குழப்பத்தில்) என்பது போல உள்ளனர்” என சாடினார். மேலும், “கடன் வாங்குவார்கள், முதலீடுகளை செய்வார்கள் என எதிர்பார்த்து பெருநிறுவனங்களுக்கான வரியை குறைத்தீர்கள். ஆனால் கடன் வாங்குவதற்கு சந்தையில் நீங்கள் (மத்திய அரசு) பணத்தை விட வில்லையே? பொருளாதார மந்த நிலையை சரி செய்ய உங்களிடம் சரியான வியூகம் இல்லை” எனவும் குறிப்பிட்டார்.

Next Story