காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு


காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 29 Sep 2019 9:23 PM GMT (Updated: 29 Sep 2019 9:23 PM GMT)

காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது.

ஜம்மு,

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுகோடு அருகே காஷ்மீரில் உள்ள இந்திய நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலையில் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷெரன் செக்டரில் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இந்திய தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் பாலகோட்டில் உள்ள மென்டகர் செக்டர் பகுதியில் இந்திய நிலை மற்றும் கிராம பகுதிகளை நோக்கி சிறிய ரக ஆயுதங்களால் பாகிஸ்தான் ராணுவம் நேற்று பகல் 3.15 மணி அளவில் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.

இதுதொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகள் மற்றும் கிராமத்தை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை கொடுத்து உள்ளது. இதில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றி உடனடியாக தகவல் இல்லை. பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரம் முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இதில் 21 இந்தியர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுக்கு இந்திய தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.


Next Story