தேசிய செய்திகள்

குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாச நடனம் + "||" + A dance group in Surat, perform garba dance wearing helmets

குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாச நடனம்

குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாச நடனம்
குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஹெல்மெட் அணிந்து கர்பா நடனம் ஆடப்பட்டது.
சூரத்,

குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக கர்பா நடன குழுவினர் வித்தியாச முயற்சியை மேற்கொண்டனர்.

இதற்காக சூரத் நகரில் நடன குழுவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி கர்பா நடனம் ஆடினர்.  இதுபற்றி அவர்கள் கூறும்பொழுது, பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்த விரும்பினோம்.  ஹெல்மெட் அணிவது நம்முடைய பாதுகாப்பிற்காகவே.  அதனால் தலையில் ஹெல்மெட் அணிந்து பொதுமக்கள் முன் நடனம் ஆடினோம் என தெரிவித்தனர்.