தேசிய செய்திகள்

பீகார்: வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர், அவரது குடும்பத்தினர் மீட்பு + "||" + Bihar Deputy Chief Minister, Family Rescued From Home In Rain-Hit Patna

பீகார்: வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர், அவரது குடும்பத்தினர் மீட்பு

பீகார்:  வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர், அவரது குடும்பத்தினர் மீட்பு
பீகாரில் வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர், அவரது குடும்பத்தினரை மீட்பு படையினர் மீட்டனர்.
பாட்னா,

பீகாரில் கடந்த மூன்று  தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பெருமழையால், நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ள  நீர் புகுந்தது. 

இந்த கனமழை வெள்ளத்தில், துணை முதல்வர் சுஷில் மோடி தனது குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டார். பாட்னாவில் அவரது வீட்டை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்திருந்தது. இதுதொடர்பாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், துணை முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.  

பீகாரின் அண்டை மாநிலமான  உத்தரபிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. இங்கு கனமழை வெள்ளத்திற்கு 87 பேர் பலியாகி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. அலமட்டி, பசவசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம்
அலமட்டி, பசவசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
3. கடந்த 24 மணி நேரத்தில் குடகு மாவட்டத்தில் 142 மி.மீ. மழை கொட்டியது மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
குடகு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 142 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. தானே, பால்கர் மாவட்டங்கள் கடும் பாதிப்பு மும்பையில் எங்கும் மழை வெள்ளம் சூறைக்காற்றால் போர்க்களமான சாலைகள்
மும்பை, தானே, பால்கரில் 3-வது நாளாக கொட்டி தீர்த்த மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சூறைக்காற்றால் பல சாலைகள் போர்க்களமாக காட்சி அளித்தன.
5. பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி
பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...