200 சி.பி.ஐ. ஊழியர்கள் இடமாற்றம்


200 சி.பி.ஐ. ஊழியர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:01 AM IST (Updated: 1 Oct 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

200 சி.பி.ஐ. ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

மத்திய புலனாய்வு துறையில் (சி.பி.ஐ.) பணியாற்றி வரும் ஊழியர்கள் ஒரே அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களின் விவரங்களை அனுப்பவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி 2 வகையான இடமாற்றங்கள் செய்யப்பட்டன. ஒரே இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர்கள் மற்றும் எழுத்தர்களாக இருந்தவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் என 200-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

Next Story