காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி


காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 1 Oct 2019 9:18 AM IST (Updated: 1 Oct 2019 9:18 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கிமி பிரிவுகளில் இன்று காலை 7.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இந்திய நிலைகளை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டது.

இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.  இதுவரை யாரும் காயமடைந்ததற்கான தகவல்கள் வெளியாகவில்லை.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ந்தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது.  இதன்பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.  இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.  ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது.

இந்த வருடம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 2 ஆயிரம் முறை அத்துமீறிய தாக்குதல் நடந்துள்ளது.  இதில் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர்.

Next Story