குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகர் அருகே கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ந்தேதி பிறந்த அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டர் வழியே தனது வாழ்த்து செய்தியை தெரிவித்து கொண்டுள்ளார்.
அதில், ஒருவர் ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை உயர்த்தும் செயல்களால் இரக்கம் சார்ந்தவராக எப்பொழுதும் காணப்படுவார். கோவிந்தின் புத்திசாதுர்யம் மற்றும் கொள்கை முடிவுகள் எடுப்பதில் புரிந்துணர்வோடு செயல்படுதல் ஆகியவற்றால் நாடு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பலன்களை பெற்றுள்ளது.
அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நீடித்த மற்றும் ஆரோக்கிய வாழ்வை அருளட்டும் என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story