காந்தி ஜெயந்தி: விமான நிலைய ஊழியர்களுக்கு மதுபான பரிசோதனை
காந்தி ஜெயந்தி அன்று விமான நிலைய ஊழியர்களுக்கு மதுபான பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவது அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) 150வது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகள் அடைக்கப்படுவது வழக்கமாகும்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி அன்று சென்னை, கோவை ,டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மது பரிசோதனை செய்யப்படும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரக தலைவர் அருண் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதுவரை விமான பைலட்டுகளுக்கும், விமான பணியாளர்களுக்கு மட்டுமே மதுபான பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விமான நிலையத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மதுபான பரிசோதனை செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story