மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும்: அமித்ஷா


மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும்: அமித்ஷா
x
தினத்தந்தி 1 Oct 2019 12:47 PM GMT (Updated: 1 Oct 2019 12:47 PM GMT)

மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும் என்று பாஜக தேசியத்தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில்  நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா பேசியதாவது:- “ தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மேற்கு வங்காள மக்கள் மத்தியில் தவறான தகவல்கள்  பரப்பப்படுகின்றன. இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினர் என என எந்த சமூகத்தினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை வராது என நான் உறுதியளிக்கிறேன். 

அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதோடு, இந்தியர்களுக்கான அனைத்து  உரிமைகளையும் பெற முடியும்” என்றார்.   சட்ட விரோதமாக நாட்டுக்குள் ஊடுருவியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமித்ஷா கூறினார்.

Next Story