தேசிய செய்திகள்

பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு + "||" + Bihar rain: Toll rises to 42, rescue operations intensified

பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
பாட்னா,

பீகாரில் பெய்து வரும் கன மழை காரணமாக வரலாறு காணாத வெள்ள பாதிப்பை அம்மாநிலம் சந்தித்துள்ளது. அங்குள்ள பாட்னா பாகல்பூர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது.  கடந்த மாதம் 27- 30  ஆம் தேதி வரையில்  42 பேர் மழை தொடர்பான சம்பவங்களால் பலியாகி  உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 பாட்னாவில் வெள்ளத்தில்  தத்தளித்து வந்த 7 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய விமான  படையினருடன், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர், இணைந்து மீட்பு நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர்.  தற்போது, அங்கு மழை விட்டுள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் மோட்டார் பம்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.

நேற்று இரவு மழை மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், மக்கள் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பரவலாக கனமழை; வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
2. சென்னை, கடலூர், நாமக்கல் பகுதிகளில் கனமழை
சென்னை, கடலூர் மற்றும் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.
3. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
5. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.