டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு படை போலீசார் அதிரடி சோதனை


டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு படை போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 3 Oct 2019 11:27 AM IST (Updated: 3 Oct 2019 11:27 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 முதல் 4 பயங்கரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி உள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதல் நடத்த அவர்கள் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

உளவுத்துறையினரின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் முக்கிய இடங்களில்  சிறப்பு படை போலீசார்  தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story