வரலாற்று நினைவுச்சின்னங்கள் அருகே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அனுமதி மறுப்பு மத்திய மந்திரி அறிவிப்பு


வரலாற்று நினைவுச்சின்னங்கள் அருகே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அனுமதி மறுப்பு மத்திய மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2019 2:30 AM IST (Updated: 4 Oct 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில் ‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகளை நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமர் வேண்டுகோளை தொடர்ந்து மத்திய சுற்றுலாத்துறை மந்திரி பிரகலாத் பட்டேல் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘நாட்டில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என அறிவித்து உள்ளார்.

காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 6 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது அந்த தடை பாயஉள்ளது. பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த தடையால் தொழிற்சாலைகளுக்கு வருவாய் இழப்பும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story