மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு


மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு
x
தினத்தந்தி 4 Oct 2019 11:06 PM IST (Updated: 4 Oct 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜனதா - சிவசேனா கூட்டணியும் மோத உள்ளன. சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் முதல் மந்திரி வேட்பாளரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அந்த சந்திப்பில், சட்டசபை தேர்தல் குறித்த தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதன்படி பா.ஜனதாவுக்கு 148 தொகுதிகளும், சிவசேனா கட்சிக்கு 126 தொகுதிகளும், பிற கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story