கர்நாடக வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1,200 கோடி - மத்திய அரசு ஒப்புதல்


கர்நாடக வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1,200 கோடி - மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 5 Oct 2019 1:30 AM IST (Updated: 5 Oct 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.1,200 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழையால் நாட்டின் பல மாநிலங்களில் பெருத்த சேதம் விளைந்தது. இதைத்தொடர்ந்து மாநிலங்களில் நடந்து வரும் நிவாரண பணிகளை உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார். இதில் கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி கர்நாடகாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1200 கோடியும், பீகார் மாநிலத்துக்கு முன்கூட்டிய ஒதுக்கீடாக 2 தவணையில் ரூ.613.75 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story