காஷ்மீரில் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் குழந்தைகள்: மோடி அரசு மீது பிரியங்கா தாக்கு


காஷ்மீரில் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் குழந்தைகள்: மோடி அரசு மீது பிரியங்கா தாக்கு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் குழந்தைகள் உள்ளதாக மோடி அரசை பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்ததைத் தொடர்ந்து அங்கு 2 மாதங்களாக அசாதாரண நிலை உள்ளது. கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து நடைபெற வில்லை.

இதற்காக, மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா சாடினார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், காஷ்மீர் நடவடிக்கையால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. நண்பர்களை சந்திக்க முடிவதில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “வளர்ச்சியைப்பற்றி பேசும் ஒரு அரசு, குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா? காஷ்மீரின் வருங்கால தலைமுறையினருக்கு இதன்மூலம் பாரதீய ஜனதா கட்சி விடுக்கும் செய்திதான் என்ன?” என கேட்டுள்ளார்.


Next Story