காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 611 கைதிகள் விடுதலை - மத்திய அரசு அறிவிப்பு
காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 611 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிவாரண திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சிறை கைதிகள் 3 கட்டங்களாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி 919 கைதிகளும், 2-வது கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி 505 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.
தற்போது காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு கடந்த 2-ந்தேதி நாடு முழுவதும் 611 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக கைதிகளுக்கு மகாத்மா காந்தியின் போதனைகளை கற்பிப்பதுடன், அவரது வாழ்க்கை தொடர்பான புத்தகங்களையும் பரிசாக வழங்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கொலை, வன்கொடுமை, போக்சோ, ஊழல் மற்றும் பயங்கரவாதம் தொடர்புடைய வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் இந்த சிறப்பு நிவாரண திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story