தேசிய செய்திகள்

குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் - எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர் + "||" + Pakistani fishing boats in Gujarat - Captured by border security forces

குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் - எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்

குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் - எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்
குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள சர் கிரீக் பகுதியில் 2 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கேட்பாரற்று கிடந்தன. அந்த பகுதியில் நேற்று காலை 8.25 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் அவற்றை கைப்பற்றினர். இந்த படகுகளில் மீன் பிடிப்பதற்கான சாதனங்கள் இருந்தன. ஆனால் ஆட்கள் யாரும் இல்லை.


இதையடுத்து, எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் எந்தவொரு பொருளும் சிக்கவில்லை.

கடந்த 2 மாதங்களாக இப்படி கேட்பாரற்ற நிலையில் பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் விடப்பட்டு புகார்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
குஜராத்தில் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. குஜராத்தில் இந்திய தேசிய மாணவர் சங்கம் -ஏபிவிபி இடையே மோதல்
ஜேஎன்யுவில் நடந்த வன்முறையை கண்டித்து அகமதாபாத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கும் ஏபிவிபி அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது.
3. குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு
குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது
குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தள்ளப்பட்டது.
5. குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு - எல்லை பாதுகாப்பு படை தீவிர விசாரணை
குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகினை மீட்டு, எல்லை பாதுகாப்பு படை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.