வீர மரணம் அடைகிற படைவீரர் குடும்பத்துக்கு நிதி உதவி உயர்வு - ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் ஆகிறது


வீர மரணம் அடைகிற படைவீரர் குடும்பத்துக்கு நிதி உதவி உயர்வு - ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் ஆகிறது
x
தினத்தந்தி 6 Oct 2019 1:30 AM IST (Updated: 6 Oct 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

வீர மரணம் அடைகிற படைவீரர் குடும்பத்துக்கு நிதி உதவி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

போரில் வீர மரணம் அடைகிற படை வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிதி உதவியை ரூ.8 லட்சமாக உயர்த்தி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு இருக்கிறார்.

ராணுவ போர் விபத்து நல நிதியத்தில் இருந்து இந்த நிதி உதவி செய்யப்படுகிறது. மேலும், கருணைத்தொகையாக பதவிக்கு ஏற்ப ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை தரப்படுகிறது. குழு காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் முதல் ரூ.75 லட்சமும், இறப்பு இணைப்பு காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.60 ஆயிரமும், படைவீரர் மனைவியர் நல சங்கத்தின் சார்பில் ரூ.15 ஆயிரமும் தரப்படுகிறது.

வீர மரணம் அடையும் படைவீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச்செலவும் வழங்கப்பட்டு விடுகிறது. ரெயில் கட்டணம் 70 சதவீதம் வரை தள்ளுபடி, மகள்கள் திருமண நிதி உதவியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story