தசரா விழா மேடையில் பாடகியிடம் காதலை வெளிப்படுத்திய இசையமைப்பாளர்


தசரா விழா மேடையில் பாடகியிடம் காதலை வெளிப்படுத்திய இசையமைப்பாளர்
x

தசரா விழா மேடையில் பாடகியிடம் இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி தனது காதலை வெளிப்படுத்தினார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பிரபல கன்னட பின்னணி பாடகி நிவேதிதா கவுடா. கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை மைதானத்தில் இளைஞர் தசரா விழா நடந்தது. இதில் சந்தன்ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்து கொண்டு பாடல் பாடினர். இந்த பாடல் முடிந்ததும் சந்தன்ஷெட்டி, விழா மேடையிலேயே தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்வதாக கூறி, ஒரு மோதிரத்தை நிவேதிதாவின் கையில் அணிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார். தசரா விழாவில் நடந்த ருசிகர சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையே உலகப்புகழ் பெற்ற தசரா விழாவை களங்கப்படுத்தும் வகையில் இருவரும் நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.


Next Story