ராகுல்காந்தி திடீர் பாங்காக் பயணம்


ராகுல்காந்தி திடீர் பாங்காக் பயணம்
x
தினத்தந்தி 6 Oct 2019 3:08 PM IST (Updated: 6 Oct 2019 4:16 PM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி நேற்று இரவு திடீரென பாங்காக் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி. இதையடுத்து சோனியாகாந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது முதல், கட்சி நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டாமல்  ராகுல்காந்தி இருந்து வந்தார்.  அவ்வப்போது கேரளாவில் உள்ள தனது தொகுதியான வயநாட்டிற்கு மட்டும் சென்று வருகிறார். 

இதனிடையே  மஹாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அந்த மாநிலங்களுக்கு சென்று ராகுல்காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் நினைத்த நிலையில், டெல்லியில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு பாங்காக் செல்லும் விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ராகுல்காந்தி புறப்பட்டுச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாங்காக் பயணம் முடித்து ராகுல்காந்தி எப்போது இந்தியா திரும்பவார் என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டன.

Next Story