எரிபொருள் இல்லாததால் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்: கர்ப்பிணி உயிரிழப்பு
ஒடிசாவில் தனியார் ஆம்புலன்சில் போதிய எரிபொருள் இல்லாததால் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் மயூர்பாஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த துளசி முண்டா என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை, அவரது கணவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு துளசியை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல செவிலியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் கணவர் தவித்துக்கொண்டிருந்தார். உடனே அவசர அழைப்பு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸை வரவழைத்து கர்ப்பிணி மனைவியை அழைத்து சென்றார். கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் திடீரென்று எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்றது. அடுத்த ஆம்புலன்ஸ் வருவதற்கு 45 நிமிடம் தாமதம் ஆன நிலையில், கர்ப்பிணிப் பெண்ணான துளசி முண்டா பரிதாபமாக உயிரிழந்தார்.
Related Tags :
Next Story