ரபேல் விமானத்திற்கு ‘சாஸ்திரா பூஜை’ - பிரான்ஸ் செல்கிறார் ராஜ்நாத் சிங்
ரபேல் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக நாளை மறுநாள் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவின் விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
இதன்படி, முதல், 'ரபேல்' போர் விமானம், வரும், 8ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ராணுவ பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் செல்ல உள்ளார். பாரிஸ் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போது, ரபேல் போர் விமானத்தில், ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாரிஸ் நகரில் உள்ள விமானப் படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதில் கலந்து கொள்ளும் ராஜ்நாத் சிங், முதல் விமானத்தை பெற்ற பின்பு, போர் ஆயுதங்களை வைத்து பூஜிக்கும் 'சாஸ்திரா பூஜை' செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story