அமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் - எல்லை பாதுகாப்பு படை விமானி ராஜினாமா
அமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, எல்லை பாதுகாப்பு படை விமானி ஒருவர் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி வெளியூர் செல்லும் போதெல்லாம், எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவு, தனது விமானத்தில் அவரை ஏற்றிச்செல்லும். உள்துறை மந்திரியின் விமானத்தை இயக்குவதற்கு ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் இருக்க வேண்டும்.
ஆனால், எல்லை பாதுகாப்பு படை விமானி ஜே.எஸ்.சங்வான் என்பவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் விமானத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தன்னை உயர் அதிகாரி போலவும், அதிக நேரம் விமானத்தை இயக்கியவர் போலவும் காட்டிக்கொள்ள தில்லுமுல்லு செய்ய முயன்றார்.
இது, அம்பலமானதை தொடர்ந்து, அவர் மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடந்து வருகிறது. டெல்லி பாலம் போலீஸ் நிலைய போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, ஜே.எஸ்.சங்வான், எல்லை பாதுகாப்பு படையில் இருந்து ராஜினாமா செய்வதாக அடுத்தடுத்து 2 கடிதங்களை அனுப்பி உள்ளார். ஆனால் அக்கடிதங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் எல்லை பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுவாக, விசாரணையில் இருக்கும் ஒருவர், ராஜினாமா செய்யவோ, ஓய்வு பெறவோ அனுமதி இல்லை என்பது விதிமுறை ஆகும்.

Related Tags :
Next Story