ரூ.45 லட்சம் தங்கத்தை கடத்திய வெளிநாட்டு ஆசாமி கைது


ரூ.45 லட்சம் தங்கத்தை கடத்திய வெளிநாட்டு ஆசாமி கைது
x
தினத்தந்தி 7 Oct 2019 1:39 AM IST (Updated: 7 Oct 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

ரூ.45 லட்சம் தங்கத்தை கடத்திய வெளிநாட்டு ஆசாமி கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர், நேற்று விமானம் மூலம் காபூலில் இருந்து டெல்லி வந்தார். சர்வதேச விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது காலணியில் தங்க கட்டிகளின் இரண்டு துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

அவற்றின் மொத்த எடை 1,315 கிராம். ரூ.45 லட்சத்து 44 ஆயிரத்து 620 மதிப்பு கொண்டது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்தனர்.


Next Story