தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது


தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
x
தினத்தந்தி 7 Oct 2019 2:21 AM IST (Updated: 7 Oct 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை கோரேகாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரும், தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான ரியாஷ் பட்டியும் (வயது50) தொழில் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். பின்னர் திடீரென ரியாஷ் பட்டி தொழில் அதிபரிடம் இருந்து விலகினார். இந்தநிலையில், அவர் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தென்மும்பை கிராபோர்டு மார்க்கெட் பகுதியில் வைத்து ரியாஷ் பட்டியை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 9-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. கைதான ரியாஷ் பட்டி ஏற்கனவே மும்பை கிரிக்கெட் அசோஷியேசனில் உறுப்பினராவதற்கு போலி கையெழுத்திட்டதாக கடந்த ஜூலை மாதம் பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

அவர் மீதும் மலாடு மற்றும் கண்டாலாவில் துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story