ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு நிதிஷ் குமார் மீண்டும் தலைவர் ஆனார்


ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு நிதிஷ் குமார் மீண்டும் தலைவர் ஆனார்
x
தினத்தந்தி 7 Oct 2019 2:45 AM IST (Updated: 7 Oct 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு நிதிஷ் குமார் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடெல்லி,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் பொறுப்பும் வகித்து வந்தார். இந்த நிலையில் கட்சி தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் நிதிஷ் குமார் சார்பில் 4 ‘செட்’ வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள்.

நிதிஷ் குமாருக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், அவர் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா கட்சி தேர்தல் அதிகாரி அனீல் ஹெட்ஜே அறிவித்தார்.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள மாநில சட்டசபை தேர்தலை கட்சி நிதிஷ் குமார் தலைமையில் சந்திக்கும்.

தற்போது பாரதீய ஜனதா கட்சியுடனான ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி உறவு திருப்திகரமாக இல்லை. சமீபத்திய வெள்ள நிலைமையை நிதிஷ் குமார் சரியாக கையாளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story