காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக், உமர் அப்துல்லாவுடன் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரை அவர்களது தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகள் குழு சந்தித்து பேசியது.
ஸ்ரீநகர்,
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதே நாளில், காஷ்மீரை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
குறிப்பாக, பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது.
இதற்கிடையே, காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரை சந்திக்க அவர்களது தேசிய மாநாட்டு கட்சி பிரமுகர்கள் அனுமதி கோரினர். அவர்களுக்கு காஷ்மீர் மாநில நிர்வாகம் அனுமதி அளித்தது. அதையடுத்து, அக்கட்சியின் ஜம்மு பகுதி தலைவர் தேவிந்தர்சிங் ராணா தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகிகள் குழு நேற்று இருவரையும் சந்தித்தது.
ஸ்ரீநகரில், ஹரி நிவாஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை முதலில் சந்தித்தனர். அப்போது, உமர் அப்துல்லா தாடியுடன் காணப்பட்டார். கட்சி பிரமுகர்களுடன் ‘செல்பி‘ எடுத்துக் கொண்டார்.
மாநிலத்தின் தற்போதைய நிலவரம், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பு 30 நிமிட நேரம் நீடித்தது.
அதைத்தொடர்ந்து, பரூக் அப்துல்லாவை அவரது இல்லத்தில் அந்த குழு சந்தித்தது. அவரிடமும் தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் முக்கியமான அரசியல் திருப்பமாக இது கருதப்படுகிறது.
சந்திப்புகளுக்கு பிறகு, அந்த பிரதிநிதிகள் குழு தலைவர் தேவிந்தர்சிங் ராணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இரு தலைவர்களும் ஆரோக்கியமாகவும், நல்ல மனஉறுதியுடனும் இருக்கிறார்கள். இருப்பினும், மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், மக்கள் படும் அவதிகள் குறித்தும் வேதனை அடைந்துள்ளனர்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்க கவர்னரிடம் அனுமதி கோருவது என கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், எந்த அரசியல் பணி நடப்பதாக இருந்தாலும், முதலில் எங்கள் தலைவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட்டவுடன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும். முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், குற்ற பின்னணி இல்லாதவர்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஸ்ரீநகரில் நேற்று வாராந்திர சந்தை திறக்கப்பட்டது. ஏராளமான வியாபாரிகள், கடை அமைத்திருந்தனர். மக்களும் பெருமளவில் திரண்டு வந்தனர். குளிர்காலம் நெருங்குவதால், ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கினர்.
ஆனால், காஷ்மீரில் உள்ள மற்ற சந்தைகள் மூடப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை. சில கடைகள் காலையில் திறக்கப்பட்ட போதிலும், பின்னர் மூடப்பட்டன. மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story