பொருளாதாரத்தில் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


பொருளாதாரத்தில் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Oct 2019 5:51 PM IST (Updated: 7 Oct 2019 5:51 PM IST)
t-max-icont-min-icon

இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியப் பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அத்துடன் ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் உற்பத்தியும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதற்காக மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேலாக அந்த நிறுவனங்கள் விடுமுறை அளித்து வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில்,

மோடி தலைமையிலான அரசுப் பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்ய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் தான் தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அளித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது என பதிவிட்டுள்ளார்.

Next Story