பிரச்சாரத்தில் 'பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எழுப்பாதவர்களுக்கு - பாஜக நட்சத்திர வேட்பாளர் எச்சரிக்கை


பிரச்சாரத்தில் பாரத் மாதா கி ஜெய் கோஷம் எழுப்பாதவர்களுக்கு  - பாஜக நட்சத்திர வேட்பாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2019 5:02 PM IST (Updated: 8 Oct 2019 5:49 PM IST)
t-max-icont-min-icon

பிரச்சாரத்தின் போது 'பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எழுப்பாதவர்களுக்கு பாஜக நட்சத்திர வேட்பாளர் எச்சரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி

அக்டோபர் 21 ம் தேதி மராட்டிய மாநிலம்  மற்றும் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக  அரசியல் கட்சிகள் அனல் தெறிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

அரியானாவில் தேர்தல் பிரசாரத்தின் போது  பாஜக வேட்பாளர் சோனாலி போகாட் "பாரத் மாதா கி ஜெய்" என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு  "மதிப்பு இல்லை" என்று பேசினார். தற்போது இந்த பேச்சு குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் நடிகரும் டிக்டாக் நடத்திரமுமான சோனாலி போகாட்  ஆதம்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னோயை  எதிர்த்து போட்டியிடுகிறார்.

சோனாலி வீடியோவில், அரியானாவின் பால்சமண்ட் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது   அங்கு கூடி இருந்தவர்களை பார்த்து "பாரத் மாதா கி ஜெய்" கோஷத்தை மீண்டும்  மீண்டும் எழுப்புமாறு  கேட்டுக் கொண்டார். ஆனால் சிலர்  கோஷம் எழுப்பவில்லை.  அவர்களை பார்த்து   தங்களைப் பற்றி அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறி அவர்களைக் கண்டித்தார்.

நீங்கள் எல்லாம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களா?   நீங்கள் இந்தியன் என்றால் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லுங்கள்  என கூறினார். ஆனால் சிலர் கோஷம் எழுப்பவில்லை.

 "நான் உங்கள் அனைவரையும் பார்த்து  வெட்கப்படுகிறேன் ... உங்களைப் போன்ற இந்தியர்கள் இருக்கிறார்கள் ... தங்கள் தேசத்துக்காக,  அரசியலுக்காக ஜெய் என்று சொல்ல முடியாதவர்கள் ..  வாக்குகளுக்கு மதிப்பு இல்லை, என கூறினார்.

Next Story